Wednesday, August 15, 2012

துயில் எழுவோம்

காலையில் துயில் எழுப்ப சேவல் இல்லாத குறையை தீர்த்து வைத்தது கடிகார ஓசை
காலையில் பொழிந்த  மழை சாரல் மேனியில் தழுவி புணர்ந்தது ஆசையாய்
மணக்கும் மல்லிகை வாசம் மூக்கை துளைத்து நாசியில் சென்று குடி புகுந்தது நேசமாய்
பூ சூடிய பெண்கள் கையில் பனித்துளியாய் மல்லிகை பூக்கள்

பாலை வனத்தில் தோன்றும் பனித்துளி போன்றது  வாழ்க்கை
பிறக்கும் பொது அழுகிறோம் பிறந்த பின்பும் அழுகிறோம்
வாழ்க்கையை வாழ பிறந்த நாம் பலநேரம் வாழ்க்கையை மறந்து வாழ்கிறோம்
பட்டாம் பூச்சி நாம் வாழ்க்கையில் பல பட்டம் சுமந்தவர்  நாம்
போராட்டம் தான் நம் வாழ்க்கை போராடுவோம் வாழ்க்கைக்கு
நீரோட்டமாய் வாழ்க்கை அதில் சில கற்களாய் பல இன்னல்கள்
தடையை தாண்டுவதே நமக்கு நமக்கு வேலை
பலர் தடைகளை உண்டாக்கினால் நிமிர்ந்து நிற்கவே பல தூண்கள்

                                                                                         வே.ந.ஹரிகுமார்

No comments:

Post a Comment