Friday, October 26, 2012

                மகிழ்ச்சி தரும் காலை 

காலையில் வெண்ணிலவில் புகை மூட்டம்
பனி பொழிவை புவிக்கு தந்து நமை வரவேற்கும் காலை
வண்ணத்து பூச்சிகளின் ரீங்காரம் மலர் மொட்டுக்களை துயில் எழுப்பும்
சோம்பல் விட்டு துயில் உணரும்  மழலைகளின் சோம்பல் அழகு
காலையில் நடை பயிலும் வயோதியர்க்கு உடம்பு ஆரோக்கியம்
கண்ணிமை திறந்து பூவின் வாசனை நுகர்ந்து
 வாசலில் கோலம் போடும் பெண்கள் கூந்தலில் துளிவிடும் நீர்த்துளி அழகு
காலை  கோவிலின் மணி ஓசை அழகு
 மகிழ்ச்சி தரும் காலை மனதிற்கு அழகு

         
மழையின் சாரல் மண்ணுக்கு இதம் அளிக்கும் 
பிள்ளைகளின் படிப்பு பெத்தவர்களுக்கு  இதம் அளிக்கும் 
மாணவர்களின் திறமை ஆசிரியர்களுக்கு இதமளிக்கும் 
மனிதன் தான் செய்யும் ஈகையால் அவனவன் மனதிற்கு இதமளிக்கும்
குடும்பத்தை காப்பது மனைவிக்கு இதமளிக்கும்
நல்பல செயல்களை செய்வதால் நாட்டுக்கு இதமளிக்கும் 
வீட்டுக்கும் நாட்டுக்கும் நல்லது செய்வதால் ஒருவன் மனிதனாகிறான் 
                                                                                      வ.ந.ஹரிகுமார்