மழைக்கு விண்ணப்பம்
மழையில் நனையத்தான் ஆசை
ஆனால் சட்டை நனைந்து விடும் என்பதால் ஒதுங்கி நிற்கிறேன் கூரைக்கடியில் ..
இருந்தும் மழை என்னை ஆரத்தான் தழுவுகிறது ...
மழைக்கு தான் என் மேல் எவ்வளவு ஆசை
என் காலில் பட்டு தவழுகிறது குழந்தை போல ..
அழைகிறது அதனுடன் கலக்க
மனம் சொல்லும் போ என கால்கள் தான் நகர மறுக்கிறது
மழையே நின்று பெய்க ...உனக்காக நான் காத்திருப்பேன் ..
நான் நின்று பெய்க என கூறியது நீ நின்று விட்டாயே
நான் சொன்னது நிற்க அல்ல நிற்காமல் பொழிய !
மழையே நீயும் விளையாட்டு பிள்ளைய
எனை நனைய செய்யும் பாங்கு உன்னிடம் காணுகிறேன்
மழையே உனக்கு விண்ணப்பம் ..சென்று வருகிறேன்
வரும் வரை எனக்காக காத்திரு ....
வே .ந.ஹரிகுமார்